Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!

எழும்பூர் - புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது. லோகோ பைலட் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது
12:39 PM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரி ரயில் நிலையம் வரை சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், இன்று (ஜன.14) விழுப்புரம் அருகே தடம் புரண்டுள்ளது.

Advertisement

ரயிலில் உள்ள ஐந்து பெட்டிகள் தடம்புரண்டிருக்கும் நிலையில், ரயிலில் ஏற்பட்ட பலத்த சத்தத்தின் காரணமாக லோகோ பைலட் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபிறகு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
PuthucheriTraintrain accidentVilupuram
Advertisement
Next Article