Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது” - மாதவிடாய் விடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!

01:15 PM Jul 08, 2024 IST | Web Editor
Advertisement

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என மாதவிடாய் காலவிடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

மாதவிடாய் காலங்களில் பணியிடத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்றம் சார்பில், “அதிக விடுப்பு பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவது என்பது பெண்களை பணியிடங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். பெண்கள் அதனை விரும்பவில்லை. பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமையவும் வாய்ப்புள்ளது.

எனவே இந்த விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றங்கள் இதில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கலாம்” என அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
Dhananjaya Yeshwant ChandrachudMenstrual LeaveSupreme courtWorking Women
Advertisement
Next Article