“மொழி அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்கும் முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்” - பிரதமர் மோடி!
அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. அம்மொழியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு இன்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
“இந்திய மொழிகளிடையே எந்த பகைமையும் இல்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அனைத்து மொழிகளையும் அரவணைத்து, வளப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு. பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு இந்தியா. இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உண்டாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்ட நாடு இந்தியா என்பது இதற்கு ஒரு சான்றாகும். இந்த மொழி பன்முகத்தன்மை நமது ஒற்றுமைக்கு மிக அடிப்படையான ஒன்றாகும்” என்றார்.