Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கல்வி கட்டணத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்" - கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

08:23 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசு , அரசு உதவிப்பெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது..

“தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் இளங்கலை , முதுகலை மாணவர்கள் சேர்க்கையை இணையதளத்தின் மூலம் நடத்தப்பட வேண்டும்.

தனியார் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளும் கட்டண விவரங்களை வெளிப்படையாக www.tngasa.in என்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும். மாணவர்கள் சேர்க்கையில் விதிமுறைகளை மீறினால் கல்லூரி முதல்வர்களும், மாணவர் சேர்க்கை குழுவுமே பொறுப்பேற்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்லைன் வழியில் மட்டுமே பெற வேண்டும். அரசு உதவிப்பெறும் கல்லூரியில் உள்ள இடங்களை , சுயநிதிப் பிரிவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கு முன்னர் பூர்த்திச் செய்ய வேண்டும்.

இடஒதுக்கீடு விதிகளை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக கண்டிப்பாக அமல்படுத்தி பின்பற்றப்பட வேண்டும்.

கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை மாணவர்கள் பதிவு செய்யும் நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குறைந்தபட்சம் ஒரு தொடர்பு எண் இருக்க வேண்டும், அதன் மூலம் அனைத்து தகவல்தொடர்புகளும் அனுப்பப்பட வேண்டும்.மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பதிவேடு பராமரிக்க வேண்டும்.

மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அரசுக் கல்லூரியில் 100 சதவீதமும், அரசு உதவிப்பெறும் சிறுபான்மைக் கல்லூரியில் 50 சதவீதம் இடங்களும், அரசு உதவிப்பெறும் சிறுபான்மையற்றக் கல்லூரிகளில் 90 சதவீதமும், அரசு உதவிப்பெறும் கல்லூரியில் உள்ள சுயநிதிப்பிரிவில் 50 சதவீதம் இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் 50 சதவீதம் இடங்களும் இட ஒதுக்கீட்டின் படி ஒவ்வொருப் பாடப்பிரிவிலும் கடைபிடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசுக் கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கை பட்டியலை www.tngasa.in என்ற இணையதளத்திலும், அரசு உதவிப்பெறும் ,தனியார் கல்லூரிகள் அவர்களின் இணையதளத்திலும் வெளியிட வேண்டும் ” என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்வதற்கு நாளை கடைசிநாள். இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 6 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 644 பேர் பதிவு செய்துள்ளனர்.

Tags :
arts and science collegefeegovt collegeTN ARTS AND SCIENCE COLLEGETution Fee
Advertisement
Next Article