Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"என்கவுண்டர் செய்வது திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது" - #EPS குற்றச்சாட்டு

10:06 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

"காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு காவல்துறை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதையும் படியுங்கள் :“என்னுடைய அழகான பயணத்தைப் பகிரும் ஒரு வழிமுறையாகும்” – கிண்டல்களுக்குப் பதிலளித்த #ManuPakkar

தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் எவரையும் கைது செய்து முறையாக விசாரித்து சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுத்தர வேண்டுமே தவிர, காவல்துறையே நீதிபரிபாலனத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதும், தங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக கூறி என்கவுண்டர் செய்வது போன்ற சூழ்நிலைகள் திமுக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1838922531455344684?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1838922531455344684|twgr^d8916e6bc7640b678f4ed2a3b13302b9e7cc9e1c|twcon^s1_&ref_url=https://www.dailythanthi.com/News/State/brutal-attack-on-those-arrested-in-murder-case-in-the-name-of-investigation-edappadi-palanisamy-condemns-1123772

Tags :
ADMKCMOTamilNaduDMKEdappadi palanisamyMKStalinNews7Tamilnews7TamilUpdatesTamilNadu
Advertisement
Next Article