Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துருக்கியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
08:22 AM Oct 28, 2025 IST | Web Editor
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
Advertisement

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் மாகாணங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிந்திகியில் பல கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. எனினும், உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் சிந்திர்கியில் கடுமையான நிலநடுக்கம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பாலிகெசிரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், 11 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது ரிக்டர் அளவில் 7.8 அளவிலான நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக சிரியாவின் வடக்கு பகுதியிலும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Tags :
earthquakeRichter scaleTurkeyTurkeyEarthquake
Advertisement
Next Article