மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.2 ஆக பதிவு!
தென்கிழக்கு ஆசியாவில் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்று மியான்மர். இது இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டு எல்லையில் இருப்பதால், பேரழிவு தரும் நில நடுக்கங்களால் மியான்மர் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மியான்மரில், இன்று மாலை 6.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலதிர்வு மையத்தின் தகவலின் படி, நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் 4.2 என்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனல் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.