Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அசாம் நாகோன் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்!

அசாமின் நாகோன் பகுதியில் இன்று பிற்பகல் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
05:54 PM Aug 18, 2025 IST | Web Editor
அசாமின் நாகோன் பகுதியில் இன்று பிற்பகல் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

அசாமின் நாகோன் பகுதியில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின் படி மதியம் 12.09 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.28 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.71 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பபட்ட உயிர் இழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.இந்த மாதத்தில் அசாமில் ஏற்பட்ட 7 ஆவது நில அதிர்வு இதுவாகும். மேலும் நாகோன் பகுதியில் 3-வது நிலநடுக்கம் ஆகும்.

இப்பகுதியில் கடந்த ஆக. 7, 8 ஆகிய தேதிகளில் முறையே 3.8, 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
assamearthquakIndiaNewslatestNewsnagonRichter
Advertisement
Next Article