Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Earthquake | பிலிப்பைன்சை உலுக்கிய நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!

06:47 AM Dec 04, 2024 IST | Web Editor
Advertisement

பிலிப்பைன்சில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

தெற்காசிய தீவான பிலிப்பைன்ஸ் கடந்த இரண்டு மாத காலங்களில் 6 புயல்களை சந்தித்தது. கடந்த நவம்பர் மாதத்தில் புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. பல வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த புயல் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பிலிப்பைன்சில் இன்று (டிச.4) நள்ளிரவு 12.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அவ்வளவு வலுவாக இல்லை என்றாலும் சிறிது நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Advertisement
Next Article