Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Earthquake | ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

07:07 AM Sep 24, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பனில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் ஏற்படுகிறது. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

Tags :
நிலநடுக்கம்earthquakeJapannews7 tamiltsunami
Advertisement
Next Article