Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Earthquake | வானுவாட்டு தீவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

08:55 AM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

வானுவாட்டு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுவாட்டு தீவு. வானுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று (டிச.17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மக்கள் மீளாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆபத்து ஏற்படும் பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

Advertisement
Next Article