Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூரியனுக்கு மிக அருகில் பூமி! இன்று பெரிஹேலியன் தினம்!

03:20 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

2024-ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி செல்லும் பெரிஹேலியன் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Advertisement

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால்,  குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும்.  இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  இதன்படி இன்று (ஜனவரி 3 ஆம் தேதி) இந்திய நேரப்படி காலை 6.08 மணிக்கு சூரியனுக்கு மிகவும் அருகில் பூமி வந்து சென்றது.  இந்த நிகழ்வுதான் பெரிஹெலியன் (perihelion) என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் - பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக இருக்கும்.  பூமி சூரியனை முழுவதும் சுற்றிமுடிக்க ஓராண்டு ஆகும்.  ஆனால்,  ஆண்டுதோறும் இதே நாளில் பெரிஹேலியன் நாள் வராது.  அதாவது ஆண்டுதோறும் இதே நாளில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வராது. மாறாக ஓரிரு வார வித்தியாசங்களில் பெரிஹேலியன் நாள் நிகழக்கூடும் என அறியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags :
closestearthelliptical orbitnews7 tamilNews7 Tamil UpdatesPerihelion DaySun
Advertisement
Next Article