Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேர்தல் வாகன தணிக்கையின்போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது - சேலத்தில் விக்ரமராஜா பேட்டி!

08:30 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

தேர்தல் வாகன தணிக்கையின்போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது என வணிகர் சங்கத் தலைவர்  விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில்   (மார்ச் - 16)  அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்,  நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதல் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது. இதனால் பல இடங்களில் அரசியல் கட்சிகள் படங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தலைவர்களின் உருவச் சிலைகளை துணிகளால் மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா சேலத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

” தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையின் போது வணிகர்களிடம் முறையான ஆவணங்கள் இருந்தால் எதையும் பறிமுதல் செய்யக்கூடாது. அப்படி பொருட்களை பறிமுதல் செய்தால் 24 மணி நேரத்திற்குள்ளாக பொருட்களை உரியவர்களிடம் வழங்க வேண்டும்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சியினர்களுக்கும் மனுவாக அளிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம்” என விக்ரம ராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
ElectionElection2024RaidSearchVehicle Check
Advertisement
Next Article