Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆடிப்பூர திருவிழா - கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை விட்டு வடையை சுட்டு பக்தர்கள் வினோத வழிபாடு!

08:30 PM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் வெறும் கைகளால் எண்ணெய் சட்டியில் கொதிக்கும் வடையை எடுத்து பக்தர்களுக்கு வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில்
ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 24ம் ஆண்டு ஆடிப்பூரம்
திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  இவ்விழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தனர்.  பின்னர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் வினோத வழிபாடாக அம்மனுக்கு முக்கிய நேர்த்திக்கடனாக 21 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் உள்ள வடையை வெறும் கைகளால் எடுத்து பெண் பக்தர்களுக்கு வழங்கினர்.  இவ்வாறு தரும் வடைகளை பெறுவதன் மூலம் தாலி பாக்கியம், குழந்தை வரன் உள்ளிட்டவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் விரதமிருந்த ஆண் பக்தர்கள் தரையில் படுத்திருக்க, அவர்களின் மார்பின் மீது உரல் வைத்து அந்த உரலில் மஞ்சளை போட்டு இடித்து அவ்வாறு இடிக்கப்பட்ட
மஞ்சத்தூளை அம்மனுக்கு பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இவ்விழாவில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமப்புறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டு சென்றனர்.

Tags :
Aadi Pooram Thiruviladevoteesfestivaltiruvannamalai
Advertisement
Next Article