Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரிலீசுக்கு தயாரான “டங்கி” | லேட்டஸ்ட் அப்டேட்!

01:40 PM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

‘Dunki’ திரைப்படத்தின்  படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் ‘Dunki’. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததால், ‘Dunki’ மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்மையில், இப்படத்தின் டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டது.  ஹார்டி என்ற கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், மனு என்ற கதாபாத்திரத்தில் டாப்சியும் படத்தில் நடிக்கின்றனர். ஆக்‌ஷன், நகைச்சுவை என எண்டர்டெயின்மென்ட் நிறைந்த படமாக ‘Dunki’ இருக்கும் என்பது வெளியான டீசரின் மூலம் தெரிய வருகிறது. விரைவில் ‘DunkiDrop2’ வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம்,  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘Dunki’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Next Article