Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துல்கர் சல்மான், ராணா நடிக்கும் #kaantha - பூஜையுடன் தொடக்கம்!

02:04 PM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் பூஜை நடைபெற்றது.

Advertisement

வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

பான் இந்தியா படமாக வெளியாகும் இத்திரைப்படம் தீபாவளிக்கு (அக்.31) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மான் அடுத்து நடிக்கும் காந்தா படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செல்வராஜ் செல்வமணி இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும், நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

Tags :
Dulquer SalmaanKaanthaNews7TamilRana DaggubatiSelvamani Selvaraj
Advertisement
Next Article