Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்விரோதம் காரணமாக நடந்த மோதல் - இருவர் கொலை !

திண்டுக்கல் மாவட்டம் கொன்னம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை மற்றும் மனோகரன் இருவருக்கும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...
10:18 AM Feb 19, 2025 IST | Web Editor
Advertisement

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கொன்னம்பட்டியை சேர்ந்த அழகுமலை மற்றும் மனோகரன் இருவருக்கும் கட்டிட வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரையும் அதே ஊரைச் சேர்ந்த நவீன் (22) தாக்கியதில் காயமடைந்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஆகினர்.

Advertisement

இதனை தொடர்ந்து நேற்று பகலில் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இரவு வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுமலை, மனோகரன் ஆகியோரை நவீன் கட்டையால் தலையில் பயங்கரமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி இரண்டு பேரை கொலை செய்த நவீன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினர் கொலையாளி நவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கூலித்தொழிலாளர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Next Article