தேஜஸ் விமான விபத்து - விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்...!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் உள்பட பல்வேறு விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள பதிவில், ”துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இதற்கு ஐ.ஏ.எஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த துயரமான நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.