ரூ.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் - 2 நைஜீரிய பெண்கள் கைது!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு தென்னாப்பிரிக்கப் பெண்கள் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
08:30 PM Mar 16, 2025 IST
|
Web Editor
Advertisement
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் இரண்டு நைஜீரிய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
பம்பா ஃபான்டா (31) மற்றும் அபிகேல் அடோனிஸ் (30) என அடையாளம் காணப்பட்ட பெண்கள், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தபோது MDMA போதைப்பொருளை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள், பாஸ்போர்ட்டுகள் மற்றும் ரூ.18,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இவர்கள் இந்தியா முழுதும் இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Next Article