Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கு - ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்!

07:54 AM Jul 12, 2024 IST | Web Editor
Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நிலையில், ஜாபர் சாதிக்குக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி அதை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாறினால் அது குறித்த விவரத்தையும் விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜாமீன் தொகையாக ரூ.1 லட்சமும், தலா ரூ. 1 லட்சத்துக்கு இருவரின் ஜாமீனையும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் திகார் சிறையில் வைத்து ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளி வரமுடியாத நிலையில் உள்ளார்.

மேலும் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags :
Drug SmugglingEDfilm ProducerJaffer Sadiq
Advertisement
Next Article