Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதைப்பொருள் விற்பனை வழக்கு - நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி மனு!

02:44 PM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி, சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Advertisement

முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம், போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவர்களை விசாரித்ததில் ஆந்திரத்திலிருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளை தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

தொடர்ந்து இந்த போதைப்பொருள் விற்பனையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தையடுத்து, ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் அவரை கடந்த டிசம்பர் 4ஆம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், அலிகான் துக்ளக்கின் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அலிகான் துக்ளக் ஜாமின் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
actorBailDrug trafficking caseMansoor Ali Khan
Advertisement
Next Article