இளநீர் குடிப்பதால் நமக்கு இத்தனை நன்மைகளா?
08:32 PM Apr 27, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
                 Advertisement 
                
 
            
        கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இதனால், உடலை நீரோற்றமாக வைத்திருக்க உதவும் மோர், சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலையில், இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.
- இளநீரில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பியுள்ளன. இது உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது.
- இதில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம், சோடியம் மற்றும் மாங்கனீசு உள்ளன. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
- இளநீர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
- இவற்றில் அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, செரிமான திறனை அதிகரிக்க உதவுகின்றன.
- இதில் குறைந்த அளவு கலோரி உள்ளது. அதனுடன் பயோஆக்டிவ் என்சைம்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- இளநீரின் சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன/
- பொட்டாசியத்தின் குறைப்பாடால் இன்று பலருக்கும் இதயப் பிரச்னை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.
- இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கு இளநீர் ஒரு நல்ல மருந்து.
- இளநீர் அருந்துவதால் சிறுநீரகக்கல் பிரச்னை வராமலும் தடுக்கலாம்.
- ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத நேரத்தில் அதாவது காலை மற்றும் மாலையில் இளநீர் அருந்துவதைத் தவிர்க்கலாம்.
- கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் இளநீர் அருந்தலாம். அவர்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்னைகள் இருந்து, அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள் எனில் அவர்கள் இளநீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி அருந்தலாம்.
- ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 - 300 ML இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உடல் கொண்டவர்கள் அதிகபட்சமாக இரண்டு இளநீர் அருந்தலாம்.
 Next Article   
         
 
            