’தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமையும்’ - முதலமைச்சர் ஸ்டாலின்!
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிலையில்
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமையும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ”இங்கு அவதூறுகளை அள்ளி இரைக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் மீதும் அக்கறையில்லை; நாட்டின் மீதும் உண்மையான பற்று இல்லை.
குறுகிய சிந்தனை கொண்டோரின் மலிவான அரசியலைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 அரசு மக்களின் ஆதரவுடன் அமையும்” என்று தெரிவித்துள்ளர்.
மேலும் அவர் தர்மபுரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய காணஒலிகளையும் இணைத்துள்ளார்.