Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிரடியாக உயர்ந்த #Gold விலை... எவ்வளவு தெரியுமா?

10:56 AM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

பொதுவாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏறும், இறங்கும். ஆனால் இந்த மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. மேலும் தீபாவளியை ஒட்டியும் கடந்த சில நாட்களாகவே விலை அதிகரித்தே வந்தது.

சென்னையில் நேற்று (அக்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.1,09,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Tags :
ChennaiDiwaliGoldGold rateprice hike
Advertisement
Next Article