Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ரிவ்யூவை யாரும் நம்பாதீர்கள்" - நடிகர் தனுஷ் வேண்டுகோள்!

உங்கள் நண்பர்கள் கூறுவதை கேட்டு படத்தை பாருங்கள் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
09:34 AM Sep 21, 2025 IST | Web Editor
உங்கள் நண்பர்கள் கூறுவதை கேட்டு படத்தை பாருங்கள் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை நித்திய மேனன், பிரபல முன்னணி நடிகர்களான சத்திய ராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பாடகர் சுவேதா மோகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் 7000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக வீசில் அடித்து கைத்தட்டி நடனம் ஆடினர்.

Advertisement

தொடர்ந்து நடிகர் பார்த்திபன் மேடையில் பேசுகையில், "35 வருடம் சினிமாவில் உள்ளேன். அதில் 4 பேரை மட்டும் தான் இயக்குனராக ஏற்று கொண்டேன். அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் ரொம்ப பிடிக்கும், நல்ல கதையை எடுத்தார். நடிகர்கள் வாழ்க்கையில் கொஞ்ச நாள் தான் உச்சத்தில் இருக்கிறார்கள். நடிகர் சத்தியராஜ் வாழ் நாளில் மிகப்பெரிய ஸ்டாராக தான் இருப்பார்".

தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் பேசுகையில், "கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகம்படுத்தினர். தம்பி தனுஷ் கூட நடிக்க ரொம்ப நாள் ஆசை, தற்போது அவர் இயக்கி நடித்த படத்தில் நடித்துவிட்டேன். தம்பி தனுஷ் தேசிய விருது வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் கலக்கி வருகிறார். ஆங்கிலத்தை மரியாதையாக பேசும் ஊர் கோவை தான்" என்றார்.

நடிகர் தனுஷ் பேசுகையில், "என்னுடைய ரசிகர்கள் யார் பக்கமும் போக மாட்டார்கள். அதில் எனக்கு பெரிய கர்வமும், கவுரவமும் இருக்கிறது. ரிவ்யூவை யாரும் நம்பாதீர்கள். உங்கள் நண்பர்கள் கூறுவதை கேட்டு படத்தை பாருங்கள். நிறைய தொழில்கள் சினிமாவை நம்பி உள்ளது. சரியான விமர்சனங்களை பார்த்து படத்துக்கு போங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
actor dhanushkovaimovieNithyamenonReviewstrailerlaunch
Advertisement
Next Article