Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்!

05:58 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை (வோட்டர் ஐடி) பிரதான ஆவணமாக கருதப்படுகிறது. வாக்களிக்க, தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளத்தை காட்டினால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதேவேளையில், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கலாம். அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும் வரை நீங்கள் வாக்களிக்கலாம். வாக்களிப்பதற்கு முன்,  இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களை வாக்காளர் பயன்படுத்தலாம்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி மற்றும் அதற்கு மாற்றாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

Tags :
Election commissionElection2024Elections With News7TamilElections2024ID ProofNews7Tamilnews7TamilUpdatesParlimentary Electionsvoter id
Advertisement
Next Article