Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் நாளை 55 மின்சார ரயில்கள் ரத்து என்று அஞ்ச வேண்டாம்.. இதோ உங்களுக்கான அறிவிப்பு!

04:41 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

Advertisement

நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தாம்பரம் வழியாக சென்னைக்கு அதிகளவிலான பொதுமக்கள் கல்லூரி மற்றும் பணிகளுக்காக வந்து செல்கின்றனர்

இந்த நிலையில் கூடுதல் பேருந்துகள் குறித்த அறிவிப்பை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் ரயில் நிலையத்தில் 23.07.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 13.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது.

பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service-ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags :
BUSChennaielectric trainnews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article