“ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம், இன்னும்...” - சாய்ரா பானு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று(மார்ச்.16) அனுமதிக்கப்பட்டு வழக்கமான சிகிச்சைக்கு பிறகு தற்போது டிஸ்ஜார்ஜ் ஆகியுள்ளார். இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், “ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பிராத்தனை செய்கிறேன். அவரது ரசிகள் மற்றும் நலன் விரும்பிகள் தரும் அன்புக்கு நன்றி. இந்த கடினமான நேரத்தில் என்னுடைய அறுவை சிகிச்சையில் நான் இருந்தாலும் அவருடனும் ஆதரவாக இருப்பேன்” என்று கூறியினார்.
அந்த அறிக்கையுடன் வெளியான குரல் செய்தியில், “ அனைவருக்கும் வணக்கம், நான் சாய்ரா ரெஹ்மான். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவருக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், அவர் ஆஞ்சியோ சிகிச்சையில் இருப்பதாகவும் எனக்கு செய்தி வந்தது. அல்லாவின் அருளால் அவர் இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான். கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை என்பதால் நாங்கள் பிரிந்திருக்கிறோம்.
தயவுசெய்து அனைத்து ஊடகவியலாளர்களும் என்னை அவரது முன்னாள் மனைவி என்று என்னை அழைக்க வேண்டாம். இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம், ஆனால், எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் உள்ளன. குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அதில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு வெளியிட்ட ஒரு ஆடியோவில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.