Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#DonaldTrump | மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட டிரம்ப் செயலாற்ற வேண்டும்: ஈராக் பிரதமர் வலியுறுத்தல்!

09:50 PM Nov 09, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய கிழக்குப் பகுதிகளில் போர்ப்பதற்றம் தணியாமல் நீடிக்கும் நிலையில், அந்த பிராந்தியத்தில் மீண்டும் அமைதி நிலவ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயலாற்ற வேண்டும் என ஈராக் பிரதமர் சூடானி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், லெபனான், ஈரான் நாடுகளில் இருந்து செயல்படும் ஆயுதப்படைகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் அடுத்த கட்டமாகத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஈராக்கை சுற்றிலும் போர்ப் பதற்றம் நிலவுவதால் தங்கள் நாட்டின் மீது தாக்குதல்கள் நிகழ்த்தபடாமல் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஈராக் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பிடம் இராக் தரப்பிலிருந்து போர் நிறுத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை நேற்று (நவ. 8) தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி பேசியுள்ளார். அப்போது டிரம்ப்பிடம், ‘மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தம் ஏற்பட செயலாற்றப் போவதாக தான் தேர்தல் வாக்குறுதியளித்தபடி டிரம்ப் செயலாற்ற வேண்டுமென்பதை’ சூடானி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஈராக் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் போர் நிறுத்தத்துக்கு ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா - ஈராக் ஆகிய இரு தரப்பும் சம்மதித்துள்ளன. ஈரானிலிருந்து செயல்படும் இஸ்லாமிக் ஸ்டேட்(ஐ எஸ்) ஆயுதப்படைகளின் தாக்குதல்களை சமாளிக்க ஈராக்குக்கு சுமார் 2,500 அமெரிக்க படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க மற்றும் ஈராக் படைகளை குறிவைத்து ஈராக்கில் ஈரான் ஆதரவு அமைப்புகள் மூலம் டிரோன் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article