Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிரம்ப் பதவியேற்பு விழா - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு!

டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
04:29 PM Jan 12, 2025 IST | Web Editor
டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றதின் தலைமை நீதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும் பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை டிரம்ப்பிடம் ஒப்படைக்கிறார்.

Advertisement

இந்த விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். பதவியேற்பு விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
Donald trumpInaugurationIndiaminister jaishankarPresidentUS
Advertisement
Next Article