Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Dominic and The Ladies Purse - GVM இயக்கத்தில் மம்முக்கா நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியானது!

08:30 PM Dec 04, 2024 IST | Web Editor
Advertisement

கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள புதிய படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. ‘மம்மூட்டி கம்பெனி’ தயாரிப்பில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்டவையே. ரோர்சா, காதல் தி கோர், கன்னூர் ஸ்குவாட், நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பிரம்மயுகம் படமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் நடிகர் மம்முட்டி தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 7வது படத்தை தயாரிக்கிறார். அப்படத்தில் அவரே நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோஸ் இயக்குகிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதில் ட்விஸ்ட் என்னவென்றால், இப்படத்தில் விநாயகத்துக்கு வில்லனாக மம்முட்டி நடிக்கிறார்.

இதனையடுத்து இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மம்முட்டியுடன் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு முன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தயாரித்து நடித்த, 'டோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது, இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கோகுல் சுரேஷ், சுஸ்மிதா பட், விஜி வெங்கடேஷ், வினீத் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு கதை டாக்டர் நீரஜ் ராஜன் எழுத திரைக்கதை, வசனத்தை டாக்டர். நீரஜ் ராஜன், கௌதம் மேனன், டாக்டர். சூரஜ் ராஜன் இணைந்து எழுதியுள்ளார்கள். கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்து வருகிறார்.

Tags :
Dominic and the Ladies pursemammootty
Advertisement
Next Article