300 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் #TirupatiLaddu! எப்போது இருந்து வழங்கப்படுகிறது தெரியுமா?
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏழுமலையான் கோயில் தான். இந்த கோயில் எவ்வளவு பிரபலமானதோ அதே அளவு பிரபலமானது இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு. திருப்பதி லட்டு மக்கள் மத்தியில் மிகவும் பெயர்போனது. இந்த லட்டு தொடர்பான காட்சிகள் சினிமாவிலும் இடம்பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த சூழலில், திருப்பதி லட்டு தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
திருப்பதி லட்டு கடந்த 1715ம் ஆண்டு ஆக.2ம் தேதி முதல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதன்படி, சுமார் 300 ஆண்டுகளாக இந்த லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 'ஸ்ரீவாரி லட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பதியில் நமக்கு மூன்று விதமான லட்டு கிடைக்கும். கோயிலுக்குள் 40 கிராம் அளவில் பிரசாதமாகவும், விற்பனை கூடங்களில் 175 கிராம் அளவிலும், சில சமயங்களில் 750 கிராம் அளவிலும் வழங்கப்படுகிறது.
175 கிராம் லட்டின் விலை 50 ரூபாய், 750 கிராம் லட்டுவின் விலை 200 ரூபாய் ஆகும். கோயிலின் அருகே உள்ள பொடு என்ற இடத்தில் இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட லட்டுகள் 175 கிராம் எடை உள்ளதா என சோதிக்கப்படும். இந்த லட்டு தயாரித்த நாளில் இருந்து 15 நாட்கள் வரை சுவை குறையாமல் இருக்குமாம். தினமும் 3 லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு மகா பிராசதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது.