Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெகவிற்கு கொள்கை இல்லையா..? - விஜய் ஆவேசம்...!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தவெக சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
03:05 PM Nov 23, 2025 IST | Web Editor
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தவெக சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
Advertisement

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

Advertisement

கரூர் கூட்ட நெரிசலை தொடர்ந்து விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து  ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜய்,

“நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக இருந்தார்” அப்படி எம்ஜிஆர் ஒரு பாடல் பாடியதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நம்ம காஞ்சித் தலைவர் பிறந்த மாவட்டம் இது. ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த கட்சியை அதன்பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்றாங்க என்பது நான் சொல்லித்தான் தெரியனுமா?

உங்களை, என்னை நம் எல்லோரையும் பொய் சொல்லி ஏமாற்றி ஓட்டுப்போடவைத்து ஏமாற்றினார்கள் அல்லவா? அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல நடிக்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

எப்படி, நமக்குக் கொள்கை இல்லையாம். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கோட்பாட்டை நம் கட்சியினுடைய முக்கிய கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்குக் கொள்கை இல்லையா? சிஏஏ அறிவித்தபோது அப்போது கட்சி தொடங்கும் முன்பே எதிர்த்த நமக்குக் கொள்கை இல்லையா?

வக்ப் சட்டத்தை எதிர்த்து முதலில் உச்சநீதிமன்றம் சென்ற நமக்குக் கொள்கை இல்லையா? ஆட்சிக்கு வந்ததும் முதலில் ரத்து செய்வதே நீட்டைதான் அப்படி இப்படி என்று கதையெல்லாம் விடாமல், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னது மட்டுமில்லாமல், அதற்கு ஒரு இடைக்காலத் தீர்வை சொன்ன நமக்குக் கொள்கை இல்லையா? சமத்துவம், சம வாய்ப்பு என்று ரொம்ப ஸ்ட்ராங்காக சொன்ன நமக்குக் கொள்கை இல்லையா?

பாப்பா பவள விழா பாப்பா நீ பாசாங்கு காட்டாத பாப்பா.. நீ நல்லவர் போல நடிப்பதைப் பார்த்து நாடே (வாயை மூடிக்காட்டுகிறார்).  இன்னும் நாங்கள் விமர்சனம் செய்யத் தொடங்கவே இல்லையே. இன்னும் அடிக்கத் தொடங்கவே இல்லையே. அதற்குள்ளாக அலறினால் எப்படி?

இந்த காஞ்சி மண்ணை வாழவைக்கும் ஜீவநதி பாலாறு. உயிர்நதி பாலாறு. இந்த மக்களுடைய உயிரோடும் ரத்தத்தோடும் கலந்தோடும் நதி பாலாறை. அந்த பாலாறை இன்று பெரியார், அண்ணா பெயர்களை சும்மா பெயருக்கு வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? சுரண்டிவிட்டனர், கொள்ளையடித்துவிட்டனர்.

அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இதில் அவர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு தெரியுமா, ரொம்ப அல்ல குறைவுதான். 4730 கோடி ரூபாய். அந்தத் துறையில் இருந்த சில நல்லவர்கள் அவர்கள் அடித்தக் கொள்ளைகளைத் தாங்க முடியாமல் வெளியில் வந்து சொன்ன ஆதாரங்கள் இருக்கிறது.

காஞ்சிபுரம் பட்டு என்றால் உலகுக்கே தெரியும். ஆனால், அதைத் தயாரித்துக் கொடுக்கும் நெசவாளர்களின் நிலை என்ன தெரியுமா? வறுமை, துன்பம், கந்துவட்டிக் கொடுமை. சாயத் தொழில், தரிப்பட்டரைத் தொழில் என்று இதை நம்பி 40 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. ஆனால், அவர்களது ஒருநாள் கூலி வெறும் 500 ரூபாய்தான். அதைக் கொஞ்சம் அதிகப்படுத்திக் கொடுங்கள் என்று அவர்கள் போராடிப் போராடி ஒன்றும் நடக்கவில்லை.

இந்தப் பிரச்னையெல்லாம் இருக்கும் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் பரந்தூர் விமான நிலைய பிரச்னையும் உள்ளது. அந்தப் பிரச்னையில் கண்டிப்பாக நாங்கள் விவசாயிகள் பக்கம் தான் இருக்கிறோம் எதில் எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது. இந்த அரசு பரந்தூர் விவகாரத்தில் எங்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த விதக் காரணமும் சொல்லி தப்பிக்கவே முடியாது.

நமது அம்மா, அக்கா, தங்கை அவர்களோடு பிள்ளைகள் ஆகியோருக்கு பாதுகாப்பை, அதுவும் ஸ்ட்ராங்கான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்தப் பெண்ணுக்கு நடந்த பிரச்னை மாதிரியோ, கோவையில் கல்லூரிப் பெண்ணுக்கு நடந்த பிரச்னை மாதிரியோ நடக்க விடவே கூடாது. நம்ம வீட்டுப் பெண்கள் ஸ்ட்ராங்காக, தைரியமாக, பயமே இல்லாமல் இருக்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாகக் கொடுப்போம். நான் மற்றவர்கள் போல சும்மா அடித்துவிட்டுவிட்டு ஏமாற்றும் வேலையெல்லாம் இங்கு கிடையாது.

அப்புறம் ஒரு அதிசயம்..அதென்னப்பா அது தற்குறியா? நம்ம டிவிகேவுக்கு சப்போர்ட் செய்யும் கோடிக்கணக்கான மக்கள், நண்பா நண்பிகள், ஜென்ஸி கிட்ஸ் எல்லோரையும் தற்குறிகள் என்று சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டு, இப்போது அவர்கள் தற்குறியெல்லாம் கிடையாது அப்படியெல்லாம் அழைக்காதீர்கள், அவர்கள் சங்கிகள் என்று அழைக்காதீர்கள் என்று ஒரு குரல். யாருடா அந்தக் குரல் என்று பார்த்தால்.. இப்போது சமீபத்தில் அறிவுத்திருவிழா என்று ஒன்றை நடத்தினார்களே, சாரி.. அவதூறு திருவிழா, அதில் அவர்களது தலைமையே குழப்பும் மாதிரி, அறிவுக்கண்ணைத் திறந்துவைப்பதுபோல ஒருவர் பேசியிருக்கிறார். அவர் யார் என்றால் அவர் ஒரு எம்.எல்.ஏ. அந்த எம்.எல்.ஏ யாரென்றால், நம்முடைய கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் உறவினர்.

மர்மயோகி என்ற படத்தில் எம்ஜிஆர் பெயர் கரிகாலன். சூப்பர் டயலாக் சொல்லியிருப்பார், குறிவைத்தால் தவறமாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன். இதெல்லாம் யாருக்கு சொல்கிறோம் எதற்குச் சொல்கிறோம் என்று புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் நன்றாக இருக்கும். ஏண்டா இந்த விஜயைத் தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களைத் தொட்டோம், நினைத்து நினைத்து ஃபீல் பண்ணப்போறீங்க.

ஒன்றுமட்டும் சொல்கிறேன் எழுதிவைத்துக்கொள்ளுங்கள், தற்குறி தற்குறி என்று சொல்கிறீர்களே இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான் வாழ்நாள் பூரா விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலையே கேள்விக்குறியாக ஆக்கப்போகிறார்கள்

இந்தப் போட்டி எப்படி இருக்கப்போகிறது என்றால், மக்களுடைய மக்களாக நிற்கும் நமக்காக மக்களே டிசைட் பண்ணப்போகிறார்கள். மைடியர் சார், மைடியர் அங்கிள்.. ஆல்ரெடி டிசைட் பண்ணியாச்சு. கான்ஃபிடெண்டா இருங்க மக்களே நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்” என்பதாக பேசி முடித்தார்.

 

 

Tags :
AnnaDMKkanjipuramkarurlatestNewsMGRtvkvijay
Advertisement
Next Article