Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அஜித்குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெற உள்ளது தெரியுமா?

05:17 PM May 26, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார்.  ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

குட் பேட் அக்லி திரைப்படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களில் கனவத்தை பெற்றது.

மேலும், இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. அதைபோல், விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : “தகைசால் தமிழர் விருதை இனி தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தற்போது, படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்கும் எனவும் அதில் நடிகர் அஜித்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
AdhikRavichandranAjithkumarAKGoodBadUglyGoodBadUglyFromPongalmovie
Advertisement
Next Article