Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 நாட்களில் ‘காந்தாரா சாப்டர் 1’படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி மூன்று நாளில், ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
07:51 PM Oct 05, 2025 IST | Web Editor
‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி மூன்று நாளில், ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement

கடந்த 2022-ம் ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகிய படம் ‘காந்தாரா’. பான் இந்தியா படமாக வெளியான காந்தாரா உலக அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

Advertisement

இதனை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின்  முந்தைய பாகமாக ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை உருவாகினார். முதல் பாகம் போலவே இப்படத்திலும் ரிஷப் ஷெட்டியே கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்சன் தேவையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’  படமானது விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பல்வேறு தரப்பினரும் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி மூன்று நாளில், ரூ.235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
cinemauptateKANTHARAkantharachapter1latestNews
Advertisement
Next Article