Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'தக் லைஃப்' படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

'தக் லைஃப்' படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
12:12 PM Jun 07, 2025 IST | Web Editor
'தக் லைஃப்' படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.

Advertisement

கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

நேற்று முன்தினம் (ஜுன் 5) வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில்  இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
ARRahmanKamal haasanMani RatnamNews7TamilSilam barasansimbustrThug LifeTrisha
Advertisement
Next Article