தங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது. இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏறியும், இறங்கியும் காணப்பட்டது.
அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 54,200க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கும், கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 6,730 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ. 101 -க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,200 குறைந்து ரூ. 1,02,200 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.