யாசகம் எடுக்கும் குழந்தைகளுக்கு DNA பரிசோதனை கட்டாயம் - அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை கடத்தல், யாசகம் எடுக்கும் குழந்தைகளின் எண்னிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில், பஞ்சாப் அரசு மற்றும் அனைத்து துணை ஆணையர்களும் ஒருங்கிணைந்து தெருக்களில் இருக்கும் குழந்தைகள் பெரியவர்களுடன் யாசகம் எடுப்பதை கண்டறிந்து,
அந்த குழந்தைகளுக்கும் அவர்களுக்கு என்ன உறவு என்பதை சரிபார்க்க டிஎன்ஏ பரிசோதனை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கவுர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஒரு குழந்தை ஒரு பெரியவருடன் யாசகம் எடுப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் குடும்ப உறவுகளை சரிபார்க்க டிஎன்ஏ சோதனை நடத்தப்படும். முடிவுகள் கிடைக்கும் வரை குழந்தை, குழந்தைகள் நலக் குழுக்களின் மேற்பார்வையின் கீழ் பராமரிப்பு நிறுவனத்தில் தங்க வைக்கப்படும் என அறிவித்தார்.
இவ்வாறு நடத்துவதன் மூலம் குழந்தை கடத்தல் மற்றும் யாசகம் எடுக்கும் குழந்தைகளின் எண்னிக்கை குறைக்கப்படும்.