Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக இளைஞரணி மாநாடு: கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு!

03:28 PM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

சேலத்தில் வரும் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

Advertisement

கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில்,  திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன்பாளையத்தில் டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது.  மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 10 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து கடந்த 15-ம் தேதியன்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: மிக்ஜாம் புயல் வரும் 4-ந் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

இதையடுத்து திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  மிகவும் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறுவதாலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,  மாநாட்டுக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கி திமுக இளைஞரணியினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.

Tags :
DMKnews7 tamilNews7 Tamil UpdatesSalemYouth Conference
Advertisement
Next Article