Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி" - பிப்.8ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக வரும் பிப்.8ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
02:21 PM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அப்போது, தேர்தல் நடைபெறும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் பலரும் பட்ஜெட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக வரும் பிப்.8ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

Advertisement

இதையும் படியுங்கள் : ஆளுநர் #RNRavi-ஐ நீக்கக் கோரிய மனு தள்ளுபடி… உச்சநீதிமன்றம் அதிரடி!

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article