Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆளுநருக்கு எதிராக திமுக நாளை கண்டன ஆர்பாட்டம்!

04:01 PM Jan 06, 2025 IST | Web Editor
Advertisement

ஆளுநருக்கு எதிராக திமுக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழக சட்டப்பேரவை இன்று (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார். ஆனால் அவர் தனது உரையை நிகழ்த்தாமலேயே பேரவையில் இருந்து வெளியேறினார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையானதை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், திமுக சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

"தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் முயற்சிக்கும் அதிமுக, பாஜகவை கண்டித்தும் திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article