"2024ல் திமுக கை நீட்டுபவரே பிரதமராக வேண்டுமெனில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலனைச்சருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும்
முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி, ஆர் ராசா, கனிமொழி, பொருளாளர்
டி.ஆர். பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்கு பல்வேறு
திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இத்திட்டங்கள் மகளிரிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. செல்லுமிடங்களில் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பை காண்கிறேன். இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.
234 தொகுதிகளில் 280 பாசறைக் கூட்டங்களை நடத்தி இளைஞரணியினரை கொள்கை
உணர்வாளர்களாக மாற்றியிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த
சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும்
ஈர்க்கும் எஃகு கோட்டையாக கழகம் திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலமாக
நிரூபித்துக் காட்ட வேண்டும்.
கொள்ளும் பிரம்மாண்டமான மாநாடாக அமைந்திட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் நாம் 40
தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே என்
நேரு தெரிவித்ததாவது..
இரண்டு முக்கிய முன்னெடுப்புகளுக்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட
செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்காக 70 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களில் மிகப்பெரிய
மாநாடுகளைப் போல இந்த கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம்.
மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும்
சந்திக்க கூடிய அளவுக்கு தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர்
கட்டளையிட்டுள்ளார்
சேலத்தில் நடைபெறக்கூடிய இளைஞர் அணி மாநில மாநாடு அமைச்சர் உதயநிதி
தலைமையில் ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின்
ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். 5 லட்சம் இளைஞர்கள் இந்த மாநாட்டிற்கு வர உள்ளார்கள்
திமுகவின் இரு வண்ணக் கொடியை மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஏற்றி வைக்கிறார். மாணவர் அணி செயலாளர் சிவி எழிலரசன் மாநாட்டை தூங்கி வைத்து
உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாடு முக்கிய மாநாடாகவும், தேர்தல் முன்னோட்டமாகவும் அமையும்” என என தெரிவித்தார்