Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டம்" - ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

தவெகவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டு வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
02:11 PM Mar 28, 2025 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி, சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், தொடங்கியது.

Advertisement

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது,

"விஜய் இனி தளபதி இல்லை-வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் பணிக்கு தயாராகி வருகிறோம். 2,75,000 பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய். அதேபோல், 70,000 பூத் கமிட்டியில் 50,000 பூத் கமிட்டியில் வெரிஃபிகேஷன் முடிந்துள்ளது.

உங்களின் அரசியலுக்கு ரிடைட்மென்ட் கொடுக்க நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம். ஊழல் அமைச்சர்களை தூக்கி எரிய கட்சியின் உட்கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.

மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக போராடும் போது ஒரு கருத்துக்களை உருவாக்கிக் கொண்டுதான் அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமையை ஆளுங்கட்சி மூடி மறைக்க பார்த்தார்கள். தமிழக வெற்றி கழகம் சார்பாக அறிக்கை வந்த பிறகுதான் எங்கே அந்த சார் என்ற குரல் ஒலித்தது.

நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக என்று மாநாட்டில் முடிவு செய்தார் விஜய், அதேபோல் கொள்கை எதிரி பாஜக. கூட்டணியை உருவாக்கி விட்டோம் எதிர்க்கட்சிகளை எப்படி உருவாக்குவது என்று திமுக யோசனை செய்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க வலு உள்ளது.

விரைவில் ஒவ்வொரு நிமிடமும் மக்களுடன் இருப்பார் விஜய். பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்த பிறகு திமுக ஒரு கட்டமைப்பை உருவாக்கினார்கள். 70 வருடங்களாக இருக்கும் திமுக எதிர்க்கட்சிகளை எப்படி எல்லாம் உடைக்கலாம் என்று யோசனை செய்து வருகிறார்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் குரலை எப்படி உடைக்க வேண்டும், பொய் பிரச்சாரங்களை எப்படி உருவாக்க வேண்டும் என்று அப்படி உருவாக்கப்பட்டவர் தான் அண்ணாமலை. அண்ணா பல்கலைக்கத்திற்காக நாடே குரல் எழுப்பி வரும் நிலையில் அண்ணாமலை சாட்டையில் அடித்துக் கொள்கிறார். எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்க முடியாது, நாங்கள் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இல்லை, ஊழல் செய்த பணத்தை லண்டலில் கொண்டாடவில்லை.

இளைஞர்கள் கூட்டம் 2026ல் புதிய முடிவை எடுக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். அண்ணாமலை பிரதமர் மோடிக்கு உண்மையாக இருக்க வேண்டும், அதனாலதான் எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் அண்ணாமலை அழைக்கிறார்கள். அண்ணாமலையை கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் வைப்பதில்லை பாஜக, எங்களுடைய குறிக்கோள் பாஜக மற்றும் திமுக மட்டும் தான், தவெகவில் ஜாதி என்பது இல்லை.

திமுக தான் ஜாதியை உருவாக்கி தேர்தல் அரசியலை வைத்துள்ளார்கள். அது எனக்கு தெரியும், அங்கிருந்துதான் நான் வேலை பார்த்து விட்டு வந்தேன். எம்ஜிஆர் கூட திமுகவில் தான் இருந்தார். ஆனால் உண்மை தெரிந்து பின் வெளியேறினார். அதுபோலதான் நானும் உண்மை தெரிந்து கொண்டு வெளியேறினேன்.

யாரேனும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பழக்கத்தை முடித்து வைக்கிறார்கள், இதுபோலத்தான் வேங்கை வையல் பிரச்சினையும் உள்ளது. தவறு நடந்தால் காவல்துறையை நாம் கேட்கிறோம் அவர்களை கேட்கக் கூடாது அப்பாவை தான் கட்ட வேண்டும். சட்டசபையில் ஜனநாயகம் இல்லாமல் வீதிகளில் எப்படி ஜனநாயகம் இருக்கும், இங்கு முதலில் ஜனநாயகமே இல்லை.

அண்ணா இருக்கும்போது திமுக ஒரு மாற்றமாக இருந்தது, பிறகு கலைஞர் வந்த போது பத்து குடும்பங்கள் சேர்ந்தது தற்போது ஒரே குடும்பம் தான், ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Tags :
Adhav ArjunaallegesDMKplanningtvkvijay
Advertisement
Next Article