Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது”- கனிமொழி பேட்டி!

திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
12:18 PM Aug 16, 2025 IST | Web Editor
திமுக தலைவர்களை எந்த பயமுறுத்தலாலும் அச்சுறுத்த முடியாது என திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழக  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய  அவர்

Advertisement

”பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில்
வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு SIR போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது  தொடர்ந்து   தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய  சோதனை.  திராவிட முன்னேற்ற கழகம் இதை எதிர்கொள்ளும். நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களை கடந்து திமுகவுடன் உறுதுணையோடு நிற்கக் கூடியவர். அதனால் எந்த பயமுறுத்தலாலும் திமுக தலைவர்களை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

Tags :
DMKEDRaidkanimizhilatestNewsministerperiyasawmiruraldevelopmentministerTNnews
Advertisement
Next Article