Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது" - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி

07:10 AM Jan 12, 2024 IST | Web Editor
Advertisement

சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

Advertisement

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 13 இஸ்லாமியர்கள் நேற்று (ஜன.11) பரோலில் விடுவிக்கப்பட்டனர்.  இதற்கு பெரும் முயற்சி எடுத்த முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு செயல்படுவதாகவும் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 36 இஸ்லாமியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக
சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  இவர்கள் விடுதலைக்காக கடந்த அதிமுக
ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  திமுக ஆட்சி ஏற்பட்டதும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்கள்
விடுதலைக்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து
வந்தார்.

இதையும் படியுங்கள்:  “தமிழ்நாட்டில் எதிர்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன!” – தேனியில் ஓபிஎஸ் பேச்சு!

இதன் விளைவாக சென்னை உயர்நீதிமன்றம் 13 இஸ்லாமியர்களை பரோலில் விடுவித்துள்ளது.  ஏற்கனவே திமுக அரசின் முயற்சியினால் சிறையில் தவித்த 15 இஸ்லாமியர்கள் மூன்று மாத பிணையில் விடுவிக்கப்பட்டனர்.   அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இன்று 13 நபர்களை 40 நாட்கள் பரோலில் விடுவித்துள்ளது.  அதுவும் பல்வேறு கட்டுப்பாடுகள் தவிர்த்து பரோல் வழங்கப்பட்டுள்ளது .

சிறையில் வாடிய இஸ்லாமியர்கள் விடுதலைக்காக பெரும்பாடுபட்ட
முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.   திமுக அரசு தொடர்ந்து சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுவதை இது காட்டுகிறது.  தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் தொடர்ந்து இஸ்லாமியர் விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது “ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
#MMKDMKJawahirullahMK Stalinnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article