Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை” - இபிஎஸ் சாடல்!

09:08 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

தி.மு.க. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement

கரூர் தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 3) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க. கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.அரசு வழங்குகிறது.வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என தி.மு.க.,வினர் மிரட்டி வருகின்றனர். தி.மு.க.,வினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அ.தி.மு.க., தான். ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக தி.மு.க. பச்சை பொய் கூறுகிறது. தி.மு.க. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. 95% நிறைவேற்றியதாக பேசுகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசுதான்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags :
ADMKedappadi palaniswamiElection2024
Advertisement
Next Article