Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#DMK பவளவிழா பொதுக்கூட்டம் – பிரம்மாண்ட ஏற்பாடுகளால் விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

12:16 PM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரத்தில் இன்று (செப். 28) திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Advertisement

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும்
பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி
திடலில் இன்று (செப்.28) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு, திமுக
பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட
செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் வரவேற்புரையாற்றுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால், திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள 75வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டத்தை பிரம்­மாண்­ட ­மேடை, பந்­தல் அமைத்து கோலா­க­ல­மாக நடத்த ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. காஞ்­சி­பு­ரம் மாந­க­ரமே திமுக கொடி தோர­ணங்­க­ளு­டன் விழாக்கோலம் பூண்­டுள்­ளது.

மழை பெய்­தால் கூட பொ­துக் கூட்­டம் தடை­ப­டா­தவாறு மாபெ­ரும் பந்­தல் அமைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வெள்ளை நிற ஹாலோ­ஜன் விளக்­கு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நவீன வச­தி­க­ளு­டன் கூடிய ஒலி பெருக்கி வசதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் 50 ஆயி­ரம் பேர் அம­ரும் வகை­யில் நாற்­கா­லி­கள் போடப்­பட்­டுள்­ளன. குடி­நீர், கழி­வறை வச­தி­க­ளுக்­கும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

Tags :
திமுக பவள விழாcm stalinDMKKanchipuramMK Stalinnews7 tamilPavala VizhaUdhayanithi Stalin
Advertisement
Next Article