Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி பண்டிகை - செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10:10 AM Oct 17, 2025 IST | Web Editor
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில் மூலமாகவும், சொந்த வாகனங்கள் மூலமாகவும் செல்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

சென்னையில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் செய்ய இருப்பதால் படாளம் சந்திப்புகளில் மேம்பால கட்டுமான பணிகள், சாலை விவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பாடு. இதனை தவிர்க்கும் விதமாக, கிழக்கு கடற்கரை சாலை திருக்கழுக்குன்றம் வழியாக மதுராந்தகம் நோக்கி செல்கின்ற மேளவளம்பேட்டை சந்திப்பில் வாகனங்கள் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள் படாளம் புக்கதுறை சாலையை பயன்படுத்தமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு காஞ்சிபுரம் விரிவாக்க சாலை வழியாக திருமுக்கூடல் வந்தவாசி, நெல்வாய் சாலை சந்திப்பு, உத்திரமேரூர், திண்டிவனம், வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
chengalpattuChennaiDiwali FestivalfestivalTraffic changes
Advertisement
Next Article