Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி பண்டிகை | ரூ.115 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை!

01:49 PM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், தற்போது வரை ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள், சுமார் 4.5 லட்சம் கிராமப்புற உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக சுகாதாரமான முறையில், தரம் ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு, பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களைத் தயாரிக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழ்நாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனம் கிராம அளவில் உள்ள இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags :
aavinDiwalimilk productsSweetsTN Govt
Advertisement
Next Article