Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி | வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

09:40 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

2023 - 24 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் நீட் போட்டி தேர்வுக்கு பயில விரும்புபவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியர்களை கொண்டு முதன்மை கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் முடிந்தவுடன் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிடப்பட்டுள்ளார்.

அதில், “ஒரு கல்வி மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.

இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு நாளுக்கு நான்கு ஆசிரியர்கள் விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் என வரிசையில் ஆசிரியர்கள் விருப்ப பாடம் அடிப்படையில் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.

அனைத்து பாடங்களிலும் அனைத்து பாடப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். நவம்பர் மாதம் முதல் வழங்கிய பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நவம்பர் 2023 முதல் இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான மார்ச் 9ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9:15 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும். காலை சிற்றுண்டி காலை 8:30 மணி முதல் 9 மணி வரை வழங்கப்படும். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் காலை 9:15 மணி முதல் 10: 45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11 மணி முதல் 12: 40 மணி வரை வாராந்திர தேர்வுகளும் நடைபெறும்.

மதிய உணவு இடைவெளிக்கு பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் மோட்டிவேஷன் அமர்வுகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.பயிற்சி வகுப்புகள் வாராந்திர தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :
ExaminationguidelinesNEETTraining
Advertisement
Next Article